முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்ததினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் நீதிமன்றுக்கு சென்றதனையடுத்து இவ்வாறு பிடியாணை மீளப்பெறப்பட்டதுடன், வழக்கு விசாரணை ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹிருணிகாவுக்கு பிடியாணை
March 10, 2021 6:03 am
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஹிருணிகா நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணைகள் ஜுன் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன
எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. #ஹிருணிகா_பிரேமச்சந்திர #நீதிமன்றம் #பிடியாணை