மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காாிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா தன்னைச்சுற்றி காவலர்கள் யாரும் இல்லாத சமயத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் தன்னை தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தொிவித்துள்ள அவா் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனவும் அதில் சதி இருப்பதாகவும் தொிவித்துள்ளாா்
இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள அரச மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதல் கட்ட சிகிச்சையில் அவரது இடது மூட்டு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் லது தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் கழுத்தில் காயம்பட்ட அடையாளங்கள் உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை இதற்கு பாஜகவே காரணம் என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சுமத்தியுள்ளது. #மம்தாபானர்ஜி #மருத்துவமனை #மேற்குவங்க #முதல்வர் #பாஜக #திரிணமூல்காங்கிரஸ்