111
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு காவல்துறையினா் தெரிவித்தனர்.
நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின்
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினா் கூறினர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , காவல்துறையினா் தெரிவித்தனர். #ஹெரோயின் #கைது #யாழ்ப்பாணம்
Spread the love