Home இலங்கை திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான செயலமர்வு!

திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான செயலமர்வு!

by admin

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்  திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை சீரமைத்து அதனை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர சபையின்  திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ பொறிமுறை தொடர்பாக மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு நடைபெற்றது.


மாநகர முல்வரின் தலமையில் நடைபெற்ற  இச் செயலமர்வில் வட்டார ரீதியாக மாநகர சபை முன்னெடுக்கும் திண்மக்கழிகவற்றலுக்கு பொறுப்பாக இருக்கின்ற அனைத்து மேற்பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். 


எதிர்காலத்தில் யாழ்.மாநகர சபை முன்னெடுக்கவுள்ள வினைத்திறனான மக்கள் பங்கேற்புடனான கழிவகற்றல் பொறிமுறை தொடர்பான விளக்கங்கள், எவ்வாறு குறித்த பொறிமுறை நடைபெற போகின்றது, அவர்களது கடமைகள் மற்றும் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பல விடயங்கள் கணணித் திரை மூலம் திரையிடப்பட்டு விளங்கப்படுத்தப்பட்டது.

குறித்த பொறிமுறையில், வட்டாரத்திற்கு என்று ஒரு தனியான கழிவகற்றல் வாகனம் மற்றும் ஆளணிகளை ஒதுக்குதல்.
பொது மக்களுக்கு வழங்குவதற்கான கழிவகற்றல் நேர அட்டவணை தயாரித்தல்.


கழிவகற்றலில் போது மக்கள் எதிர் நேர்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக உடன் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கான இலத்திரனியல் வசதி கழிவற்றும் போது அதனைக் கண்காணிக்கின்ற மேற்பார்வையாளர் குறித்த குடியிருப்பாளரிடம் கையொப்பம் வாங்கும் நடைமுறை.
கழிவகற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு விடயங்கள், மற்றும் கழிவகற்றும் வாகனத்தின் பாதுகாப்பு.


நேர அட்டவணையின் பிரகாரம் குறித்த வீதியில் குறித்த தினத்தில் கழிவகற்றல் நடைபெற்றதா என்பதனை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு பொறிமுறை.


திண்மக்கழிவகற்றல் நடைமுறைகள் மற்றும் தரம் பிரித்தல் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தல் அது தொடர்பில் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து வட்டார ரீதியாக நடமாடும் சேவைகளையும் கருத்தரங்குகளையும் ஒழுங்குபடுத்தல்.


பாடசாலை மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கழிவகற்றல் முகாமைத்துவம் பற்றிய கருத்தரங்குகளை ஓழுங்குபடுத்தல்.


திண்மக்கழிவகற்றல் பொறிமுறை சீரான பிற்பாடும் மக்கள் பொறுப்பற்ற முறையில் கழிவுபொருட்களை வீதியில் வீசுவதை தடை செய்தல்.


அதனை கண்காணிக்க மாநகர காவலர்களை நியமித்து இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடப்பவர்களிடம் இருந்து அதிகளவு தண்டப்பணம் விதித்தல் சட்ட நடவடிக்கை எடுத்தல்
போன்ற பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.


குறித்த செயலமர்வில், மாநகர ஆணையாளர் ஜெ.ஜெயசீலன், மாநகர செயலாளர் அ.சீராளன், சுகாதரக்குழு தலைவர் வ.பார்த்திபன் மற்றும். சுகாதரக்குழு உறுப்பினர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


வட்டார ரீதியாக பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நேரஅட்டவணை தயாரித்தல் மற்றும் கழிவகற்றல் வாகனங்களை வாடகைக்கு அமர்தல், மக்கள் அதிகளவில் கழிவுப்பொருட்களை வீசும் இடங்களை புவியில் ரீதியில் அடையாளப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. வெகுவிரைவில் இவ் கழிவகற்றல் பொறிமுறை நடைமுறைக்கு வரும் என செயலமர்வில் தெரிவிக்கப்பட்டது. #திண்மக்கழிவகற்றல் #செயலமர்வு #யாழ்_மாநகரசபை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More