7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று காவல்துறையினரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கைதாகிய சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர்.
இதில் கைதான சந்தேக நபர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. #கள்ளநோட்டு #கைது #வாழைச்சேனை