மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை எதிா்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழாம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, அவா்களை இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. #கொழும்புமேல்நீதிமன்றம் #ரவி_கருணாநாயக்க #கைது #மத்தியவங்கி_பிணைமுறி