Home உலகம் சொந்த சமூகவலைத் தளம் மூலம் மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்!

சொந்த சமூகவலைத் தளம் மூலம் மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்!

by admin

சமூகவலைத்தளங்களின் ஏகபோகம் நீண்ட காலம் நீடிக்காது.இணைய உலகில் தாங்கள் ஒதுக்கப்படுவதாகஉணர்கின்ற சக்திகள் தங்களுக்கானசமூகவலைத் தளங்களை தாங்களேஉருவாக்க எண்ணுகின்றன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் சமயத்தில் தனது சொந்த நாட்டின் முன்னணி இணைய ஐம்பவான் நிறுவனங்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டார்.

உலகெங்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் அவரது சர்ச்சைக்குரிய பதிகளில் இருந்து தடுக்கப்பட்டார். அரசியல் எதிர்காலத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் ருவீற்றர், முகநூல், யூரியூப் என்று அவர் ஆடிய களங்கள் அனைத்தும் திடீரென அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால் மிகவும் ஆடிப்போயி ருந்தார்.

முகநூலைத் தொடர்ந்து 88 மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருந்த ட்ரம்பின் கணக்கை ருவீற்றர் தளமும் நிரந்தரமாக முடக்கி விட்டது. சமூக வலைத் தளங்கள் ஊடாக நாட்டில் வன்முறையைத் தூண்டினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டே அவரது கணக்குகள் முடக்கப்பட்டன.

ட்ரம்ப் அடுத்த மூன்று மாதங்களில் உல கில் பல மில்லியன் கணக்கான பயனாளர்களைக் கவர இருக்கின்ற ஒரு புதிய சமூகவலைத் தளத்தில் உலா வர இருக் கிறார் என்ற தகவலை அவரது பேச்சாளர் Jason Miller வெளியிட்டிருக்கிறார்.

புதிய தளம் “மிகப் பெரியது” உலகில் பெரும் “சூட்டைக் கிளப்பும்” என்று அவர் குறிப் பிட்டிருக்கிறார்.அமெரிக்காவின் மிகப் பிரபல வர்த்தக ரும் கோடீஸ்வரருமாகிய டெனால்ட் ட்ரம்ப், தொடங்க இருக்கின்ற புதிய சமூக ஊடகம் குறித்து மேலதிக விவரங்கள்வெளியாகவில்லை.

டெனால்ட் ட்ரம்ப் 2024 இல் நடைபெற வுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களம் இறங்குவார் என்ற கேள்விகளை இன்னமும் அவர் மறுக்கவில்லை. அதனை இலக்காகக் கொண்டே புதிய சமூக வலைத் தளத்தை அவர் ஸ்தாபிக்கின்றார் எனக் கூறப்படுகிறது. #சமூகவலைத்தளம் #ட்ரம்ப் #ருவீற்றர் #முகநூல் #யூரியூப்

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.22-03-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More