பங்களாதேஸ் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக உள்ள ஷேக் ஹசீனாவை கொல்ல முயற்சித்த 14 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு ஷேக் ஹசீனா பொதுக்கூட்டமொன்றில் பங்கேற்கச் சென்ற போது மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடமா்பான விசாரணைகளில் ஷேக் ஹசீனாவை படுகொலை செய்வதற்காக வெடி குண்டு வைத்திருந்தமை தெரியவந்தது.
இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு இதனுடன் தொடா்புடைய 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் டாக்கா உயா்நீதிமன்றம் வழங்கி தீர்ப்பளித்திருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 14 போ் மீதான விசாரணை டாக்கா விரைவு விசாரணை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்தது.
இதில் குறித்த 14 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து 14 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்துள்ளாா். #ஷேக்ஹசீனா #கொலை_முயற்சி #தூக்கு_தண்டனை #பங்களாதேஸ்