Home இலங்கைகரிசல் காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு.

கரிசல் காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு.

by admin


மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள  காட்டுப் பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவல் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல்துறையினா் சடலத்தை மீட்டுள்ளனா்.


குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த சடலம் சிதைவடைந்து உருக்குழைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது


இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்றுள்ள தடயவியல் நிபுணத்துவ காவல்துறையினா் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #கரிசல்காட்டுப்பகுதி #உருக்குழைந்த #சடலம் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More