இள வயதினர் வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்கள் அல்லர். வைரஸின் மாறுபாடான குணவியல்புகள் தற்போது இளைஞர்களையும் தாக்கிவருகின்றது. பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவி யே வேரன் இன்று மாலை நடத்திய வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு எச்சரிக்கை செய்தார்.
பாரிஸ் பிராந்தியம் உட்பட நாடெங்கும் ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் இளவய தினரின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதை உறுதிப்படுத்திய
அமைச்சர், “கொரோனா வைரஸ் அதன் ஆரம்பத்தில் அதிகம் வயோதிபர்களை யே பலி எடுத்துவந்தது. தற்போது அதன் மூன்றாவது அலையில் புதிய வைரஸ் திரிபுகள் இளவயதினரையும் குறி வைக்கின்றன – என்று தெரிவித்தார். வீடுகளிலும் பொது இடங்களிலும் விழிப்புடன் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு அவர் இளைஞர்களைக் கேட்டுள்ளார்.
இதேவேளை – தற்போது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற 16 மாவட்டங்களுடன் மேலும் மூன்று மாவட்டங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுகின்றன என்று சுகாதார அமைச்சர் அறிவித்தார். Aube (10), Nièvre (58) Rhône (69) ஆகிய மூன்று மாவட்டங் களிலேயே பொது முடக்க கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன.
தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்து வதற்காகப் பாடசாலைகளை விடுமுறை தினத்துக்கு முன்பாகவே நேரகாலத் துடன் மூடுமாறு விடுக்கப்பட்ட கோரிக் கை தொடர்பாகக் கருத்து வெளியிடுகை யில் –
“பள்ளிகளை மூடுகின்ற முடிவு எப்போ தும் ஆகக் கடைசியில் எடுக்கப்படுகின்ற ஒருமுடிவாகவே இருக்கும்” – என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
குமாரதாஸன். பாரிஸ்.
25-03-2021