Home இலங்கையாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம்

by admin

யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த அவசர கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றபோது இந்தத் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படுவதுடன் கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்மாநகரப் பாடசாலைகளில் தொற்றாளாடகளாக அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றன.

மேலும்  யாழ் மாவட்டத்தில் மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் என்பன மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் எனினும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும் தொிவிக்கப்பட்டுள்ளது

 அதேவேளை உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் யாழ்ப்பாணம் மாநகரில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுவதுடன் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது #யாழ்ப்பாணம்_மாநகரின் #மத்தியபகுதி #முடக்க #கொரோனா #திருமண_நிகழ்வுகள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More