மும்பையின் பந்தூப் பகுதியில் அமைந்துள்ள கொவிட் -19 தோற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து சன்ரைஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன் 7 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுக்கப்பட்ட பின்னா் உயிாிழந்துள்ளனா்.
மருத்துவமனையின் கீழ் தளத்தில் உள்ள மால் பகுதியில் நேற்று இரவு 12 திடீரென பற்றிக் கொண்ட தீ மேல் தளங்களில் உள்ள மருத்துவமனைக்கும் பரவியது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை கருவிகளின் எச்சரிக்கை மணி ஒலித்தததனையடுத்து கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்ற சுமார் 22 தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீா் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே 70 கொரோனா நோயாளிகள் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டு அவர்கள் மும்பையில் உள்ள வேறு இரு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுமார் 10 நோயாளிகள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களில் 2 பேர் தீக்காய்ஙகளுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா்களும் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மாலில் ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிவிக்கப்படுகின்றது..
5 மாடிகள் கொண்ட அந்த மருத்துவமனைக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் மால் உள்ளது. 3, 4-வது மாடிகளில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருந்தது. தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.
குறித்தமருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #மும்பை #மருத்துவமனை #தீவிபத்து #கொரோனா #நோயாளா்கள்