Home உலகம் சூயஸ் கால்வாய் முடக்கம் கழிப்பறைக் காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!

சூயஸ் கால்வாய் முடக்கம் கழிப்பறைக் காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!

by admin

Cargo Ship Ever Given got stuck in Egypt’s Suez Canal, blocking traffic in a crucial waterway for global shipping. (Photo: Instagram/fallenhearts17)


சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட உலகின் இயக்கத்தை ஒரே யொரு கப்பலின் தடுமாற்றம் பெரிதும் உலுக்கி விட்டிருக்கிறது.

சூயஸ் கால்வாயின் முடக்கத்தால் சாதாரண கழிப்பறைக் காகிதம் முதல் கோப்பிக் கொட்டை வரை பல அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய பொதிகள் முதல் அமேசனில் ஓடர் செய்த பொருள்கள் வரை எதுவுமே நேரகாலத் துக்கு உரியவர்களைச் சென்றடைவது தாமதமாகும் என்றும் அறிவிக்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் நெருக்கடி காரண மாக உலகெங்கும் சில பொருள்களுக்கு ஏற்பட்ட பெரும் தட்டுப்பாட்டை சீனா அதன் உற்பத்தி வீச்சினால் ஈடுசெய்து வந்தது. சீனாவில் இருந்து அவ்வாறு ஐரோப்பா நோக்கி எடுத்து வரப்பட்ட பல பொருள்கள் அடங்கிய கொள்கலன்கள் தற்சமயம் சூயஸ் கால்வாய்ப் பகுதியில் நகர முடியாத நிலையில் உள்ள கப்பல்க ளில் முடங்கி உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


அதைவிட கழிப்பறைக் காகிதங்களைத் தயாரிப்பதற்குப் பயன் படுத்தப்படுகின்ற மரக் கூழ் அடங்கிய பல பாரிய கொள்கலன்களும் அவ்வாறு கப்பல்களில் முடங்கி உள்ளதால் அவற்றை விநியோகிப்பது தாமதமாகும் என்று அமெரிக்காவின்
‘Bloomberg செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


பிறேசிலைச் சேர்ந்த உலகின் முன்னணி மரக்கூழ் (wood pulp) தயாரிப்பு நிறுவன மாகிய Suzano SA கம்பெனியின் நிறை வேற்று அதிகாரி ஒருவரே இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். இதனால் கழிப்ப றைக் கடதாசிகளைத் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மரக்கூழ் கிடைப் பது தாமதமாகலாம் என்று சொல்லப்படு கிறது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பத்தில் உல கெங்கும் கழிப்பறைக் காகிதங்களை மக்கள் பதற்றத்துடன் அதிக அளவில் கொள்முதல் செய்து சேமித்து வைக்க முற்பட்டதால் ஏற்பட்டது போன்றதொரு தட்டுப்பாடு மீண்டும் உருவாகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


காலவாய்க்குக் குறுக்கே சிக்கி உள்ள கப்பலை நகர்த்தும் பாரிய பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகெங் கும் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரப் பாதிப்புகளுக்காக அந்தக் கப்பலின் ஜப்பானிய உரிமையாளர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
கப்பல் கால்வாயில் சிக்கியமைக்கு புயல்காற்று மட்டும் காரணமாக இருக்க முடி யாது. “மனிதத் தவறுகள்” , “தொழில்நுட்பக் கோளாறுகள்”போன்றனவும்இருக்கக் கூடும் என்று எகிப்தின் சூயஸ் கால்வாய் அதிகார சபையின் தலைவர் செய்தியா ளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். பொறுப்பு யார் என்பதை உடனடியாக நிறுவுவது கடினம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.
27-03-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More