199
யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரை சந்தி பகுதியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகள் தீ வைத்தமையால் முகப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
முகப்பு பகுதிக்கு விஷமிகள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். முகப்பு பகுதி தீ பற்றி எரிவதனை கண்ணுற்றவர்கள் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்த போதிலும் , அவர்கள் அச்சமயம் பிறிதொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு இருந்தமையால் அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமாகியமையால் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. #கிட்டு_பூங்கா #முகப்பு #விஷமிகள் #தீவைப்பு #நல்லூர்
Spread the love