மாதிரி பரிசோதனையில் தரமற்ற தேங்காய் எண்ணை என கண்டறியயப்பட்ட சுத்திகரிக்கப்படாத எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.வி. ஹரிப்பிரிய சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணையில் அஃப்லோடாக்சின் என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து இவ்வாறு அவா் அறிவித்துள்ளாா்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள 13 கொள்கலன்களில் உள்ள தேங்காய் எண்ணெயில் அஃப்லோடாக்சின் என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலினையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த தேங்காய் எண்ணெய் தரமற்ற நிலையில் யில் இறக்குமதி செய்யப்பட்டதனை அடையாளம் கண்டுக்கொண்டதாக தர நிர்ணய சபை தெரிவித்துள்ளது. .
இதேவேளை, 27,500 லீற்றர் மனித பாவனைக்கு உதவாத விசப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெயுடன் 2 பௌசர்களின் சாரதிகள் தங்கோவிட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா். #தேங்காய்எண்ணை #புற்றுநோய் #மீள்_ஏற்றுமதி #சுங்கப்பணிப்பாளர்