Home இலங்கைதடுப்பூசியின் பின் சோதனையில் தொற்று இல்லையெனில் தனிமைப்படுத்தல் இல்லை

தடுப்பூசியின் பின் சோதனையில் தொற்று இல்லையெனில் தனிமைப்படுத்தல் இல்லை

by admin

கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என, கொவிட்- 19 நோய்த் தொற்றைத் தடுக்கும் தேசிய செயலணியின் தலைவரும்  இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்றிட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள், ஏற்கனவே கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டவர்களாக இருப்பினும்,  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைத்தால், அவர்கள் வருகைதந்த 2ஆம் நாள் முதலே, சமூகத்தில் இணைய முடியும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

எனினும் வெளிநாட்டவர்களுக்கு வெவ்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்படுவதனால் அவா்கள் 7ஆவது நாளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தாலே தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வெளியேறலாம் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார். #தடுப்பூசி #இலங்கையர்களுக்கு #தனிமைப்படுத்தல் #கொவிட்19 #சவேந்திரசில்வா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More