127
51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நேற்றய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக குறிப்பிட்டள்ளார்..
இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதாகும்.
ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Spread the love