Home இலங்கைமன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

by admin

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்   இராயப்பு யோசேப்பு ஆண்டகை  தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.


குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார்.


நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6.30  மணியளவில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


 ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார். #மன்னார் #ஆயர் #இராயப்புயோசேப்பு #காலமானார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More