இலங்கை பிரதான செய்திகள்

2இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

50 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்ததாக குடும்பத்தலைவர் ஒருவர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இன்று அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான குற்றத்தடுப்பு காவல்துறைப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தே நபரிடம் கைப்பற்றப்பட்டது. அவர் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் கூறினர் #போதைபொருளுடன் #கைது #காங்கேசன்துறை #தந்தை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.