120
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று பொதிகளாக இருந்த 1 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொதிகள் விமான நிலைய கழிவறைக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love