தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிப்பதற்கு அரசாங்கம் வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செயலற்றதாக்குமாறு ரீட் மனு ஒன்றை வௌியிடுமாறு கோரி 20 தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணைகளை மே மாதம் 5 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதுடன் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, தொழிலாளர்கள் ஆணையாளார் உட்பட 19 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.