உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் முதல் ஆரம்பமாகின்றன. கடைகளும் திறப்பு –
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்துள்ளார். அதில் முக்கியமாக உணவகங்களும் அருந்தகங்களும் அவற்றின் வெளி சேவைகளை (serving customers outdoors) வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் தொடங் கலாம். சகல வர்த்தக நிலையங்களும் அன்று தொடக்கம் முழுமையாகத் திறக் கப்படும்.
டவுனிங் வீதி அலுவலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது அவருடன் தலைமை அறிவியல் ஆலோசகர் Patrick Vallance, இங்கிலாந்து மருத்து வமனைகளின் தலைமை அதிகாரி Chris Whitty ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நாட்டுப் பிரஜைகள் அனைவரும் வாரத்தில் இரண்டு தடவைகள் தங்களைத் தாங்களே சுய வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வசதியாக அதற்கான கருவிகளை அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்திருக்கிறார்.
அரசின் வைரஸ் பரிசோதனை நடவடிக் கைகளை விரைவுபடுத்துவதற்காக மருந்தகங்கள், சோதனை மையங்கள் போன்ற இடங்களிலும் தபால் மூலமும் கருவிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
முப்பது நிமிடங்களில் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த வைரஸ் பரிசோதனைக் கருவிகள்( lateral flow kits) தொற்று அறிகுறி இல்லாத நிலையிலும் ஒருவர் தனக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதை தானே பரிசோதித்துத் தெரிந்து கொள்ள உதவும்.
தற்சமயம் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகள் தொற்றியோரில் மூன்றில் இரண்டு பேர் எந்தவித அறிகுறிகளையும் வெளிப் படுத்தாதவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் தொற்று நிலைமையை விரைந்து மதிப்பிடுவதற்கு சுய பரிசோதனைகள் உதவும் என்று அரசு நம்புகிறது. ஆனால் பல மில்லியன் பவுண்ட்ஸ் நிதிச் செலவில் கருவிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் முறைகேடுகளால் பெரும் நிதி விரையத்தை ஏற்படுத்தலாம் என்று அரசின் நடவடிக்கைகளை விமர்சி ப்பவர்கள் கூறுகின்றனர்.
அதைவிட தங்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளதாக சுயபரிசோதனை மூலம் போலியாகப் பதிவுகளைச் செய்பவர்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற முடிவுக்கு எதிர்மாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசைத் திசை திருப்பிவிடுவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.
சர்வதேச பயணங்கள் மே 17 முதல்
மே 17 முதல் சர்வதேச பயணங்களை ஆரம்பிப்பதற்கு அரசு “நம்பிக்கை” கொண்டுள்ளது என்றும் பிரதமர் இன்று அறிவித்தார். ஆனால் எல்லை தாண்டிய பயணங்கள் வைரஸின் புதிய திரிபு களை மீண்டும் நாட்டுக்குள் இறக்குமதி செய்துவிடலாம் என்ற அச்சத்தைக் “குறைத்து மதிப்பிடமுடியாது” என்றும்
எச்சரித்தார்.
பிரிட்டிஷ் மக்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை மே 17 ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு வசதிகளைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்காக அவசரப்பட்டு இப்போதே ஆசனப் பதிவுகளைச் செய்ய வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தி உள்ளது.
நாளாந்தக் கருமங்களில் ஈடுபடுவதற்கு தடுப்பூசிச் சான்றிதழ் (vaccine passport) அவசியமா என்பது குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “இரண்டாவது, மூன்றாவது கட்டத் தளர்வுகளின் போது அது அவசியமான ஒன்றாக இருக்காது. அதுபற்றி மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.