Home இலங்கையாழில் இன்று 25 பேருக்கு கொரோனா

யாழில் இன்று 25 பேருக்கு கொரோனா

by admin

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடமாகாணத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை
கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழில் அடையாளம் காணப்பட்ட 25 பேரில் 13 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 607 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 28 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் நான்கு பேருக்கும் , உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கும் (5 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், 
ஏனைய நான்கு பேரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்)

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் (சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் (இருவரும் மாநகர கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்)

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும்( இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்)

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆறு பேருக்கும் (மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள்)

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் என யாழில் 25 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


அதேவேளை மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் , வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது என  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தோரின் ஒரு தொகுதி மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More