யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் இன்றைய தினம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தனர்.
காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் காவல்
படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
அத்துடன் தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க காவல் நிலையத்திற்கு வருமாறு காவல்துறையினரால் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த விசாரணைகள் தொடர்பில் காவல்துறையினரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக அறிவித்துள்ள மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்