Home இலங்கைதிருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த 88பேர் உள்ளிட்ட 129 பேருக்கு கொரோனா!

திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த 88பேர் உள்ளிட்ட 129 பேருக்கு கொரோனா!

by admin

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு ஆயிரத்து 3 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கும் ,யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More