உலகம் கட்டுரைகள் பிரதான செய்திகள்

“போருக்கு பிந்தைய பிரிட்டனில் படிந்த சாம்பலில் மின்னிய வண்ணங்கள்” கோமகனின் வாழ்வும் சாவும்” ஒருபார்வை!

இரங்கல்: மாட்சிமை பொருந்திய இளவரசர் பிலிப், எடின்பரோ கோமகன்

எடின்பரோ கோமகன்

இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன், அரசி மீதான நிலையான மற்றும் உறுதியான ஆதரவால் அனைவரது விரிவான மரியாதையை வென்றார்.

கடற்படை தளபதியாகவும், வெவ்வேறு விவகாரங்களில் விரிவான கடுமையான கருத்துகளையும் கொண்டிருந்த அந்த ஒருவரைத் தவிர, எவருக்கும் அது ஓர் கடினமான பாத்திரமாக இருந்திருக்கும்.

இருப்பினும், அந்த வலுவான குணாதிசயம்தான், அவரது பொறுப்புகளை மிகவும் திறம்பட ஆற்றவும், அரசிக்குரிய பணியை அவரது மனைவி ஆற்றுவதற்கு முழுமனதான ஆதரவை வழங்கவும் அவருக்கு வழிவகுத்தது.

இறையாண்மை மிக்க பெண்ணின் ஆண் துணைவராய், இளவரசர் ஃபிலிப்புக்கு எவ்வித அரசியலமைப்பு பதவியும் கிடையாது. ஆனால், அரசியை நெருங்க வேறு எவரோ அல்லது, அரசிக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தையும் அவர் இருந்ததைப் போல வேறு எவராலும் பெற முடியாது.

கிரீஸ் இளவரசர் ஃபிலிப் 10 ஜூன், 1921-ல் கொர்ஃபு தீவில் பிறந்தார். க்ரெகோரியன் பஞ்சாங்கத்தை கிரீஸ் ஏற்றுக் கொள்ளாததால், அவரது பிறந்த நாள் சான்றிதழில் 28 மே 1921 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது தந்தை க்ரீஸ் இளவரசர் ஆன்ட்ரூ, ஹெலன்ஸ் மன்னர் முதலாம் ஜார்ஜின் இளைய மகன். தாய் பட்டென்பெர்க் இளவரசி அலைஸ், பட்டன்பெர்க் இளவரசர் லூயியின் மூத்த மகள் மற்றும் மவுன்ட்பேட்டன் பிரபுவின் சகோதரி.

1922இல் கலகம் ஏற்பட்ட பிறகு புரட்சிகர நீதிமன்றத்தால் அவரது தந்தை க்ரீஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,ஃபிலிப்பின் தாய் இளவரசி அலைஸ், அரசியின் விக்டோரியா கொள்ளுப்பேத்தி

அவரது உறவினர் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அனுப்பி வைத்த பிரிட்டிஷ் போர் கப்பலில் இவர்களின் குடும்பம் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தப் பயணத்தின் பெரும்பகுதியை குழந்தையாக இருந்த ஃபிலிப், ஆரஞ்சுப் பெட்டியால் செய்யப்பட்ட சிறிய தொட்டிலிலேயே கழித்தார்.

சகோதரிகள் நிறைந்த குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்த ஒரே சிறுவன், தனது குழந்தைப்பருவத்தை பாசம் மிகுந்த சூழ்நிலையில் கழித்தார்.

பிரான்ஸில் தமது கல்வியை இளவரசர் தொடங்கினார். ஆனால், ஏழு வயது இருக்கும்போது இங்கிலாந்தில் உள்ள மவுண்ட்பேட்டன் உறவினர்களுடன் தங்குவதற்காக வந்தார். அங்கு சர்ரீயில் ஆரம்பப் பள்ளியில் படித்தார்.

இந்த நேரத்தில் அவரது தாய்க்கு மனச்சிதைவு நோய் இருப்பது தெரிய வந்ததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இளம் இளவரசருக்கு அவரிடம் சிறிதளவே தொடர்பு இருந்திருக்கும்.

1933-ல் தெற்கு ஜெர்மனியில் கல்விப் பெருந்தகை குர்ட் ஹான் நடத்தி வந்த ஷுல் ஸ்க்லாஸ் சலேமிற்குசென்றார். ஆனால், வெகுசில மாதங்களிலேயே, யூதரான ஹானிற்கு, நாஜிக்களின் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஸ்காட்லாந்தில் குடியேறிய ஹான், கார்டன்ஸ்டொன் பள்ளியை நிறுவியதையடுத்து, ஜெர்மனியில் வெறும் இரண்டு மாதங்கள் வசித்த நிலையில், இளவரசர் அந்தப் பள்ளிக்கு மாறினார்.

பெற்றோரைப் பிரிந்த பதின்ம வயது சிறுவனுக்கு, கார்டன்ஸ்டொனில் சுய நம்பிக்கையை வலியுறுத்திய கிரேக்க ஆளுமை நிறைந்த சூழ்நிலை, அவர் தனியாக வசிப்பதற்கான ஏற்புடைய சூழ்நிலையை வழங்கியது.

போர் தோன்றிய நிலையில், ராணுவ பணிக்கு செல்ல இளவரசர் ஃபிலிப் முடிவு செய்தார். ராயல் விமானப்படையில் சேர அவர் விரும்பினார். ஆனால், அவரது தாயாரின் குடும்பம், கடல் மாலுமிகள் பாரம்பரியத்தை கொண்டிருந்ததால், அவர் டார்மெவுத்தில் உள்ள பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியில் பயிற்சி மாணவராக சேர்ந்தார்.

அங்கு பணியில் இருந்தபோது, கல்லூரியை சுற்றிப்பார்க்க வந்த இரண்டு இளம் இளவரசிகளான எலிசபெத் மற்றும் மார்கரெட்டிற்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

நேரில் பார்த்தவர்களைப் பொருத்தவரை, மிகச் சிறந்த முறையில் இளவரசர் ஃபிலிப் பணியாற்றினார். ஆனால், அந்த சந்திப்பு, 13 வயது இளவரசி எலிசபெத் மனதில் ஆழமாகப் பரிந்தது.

விரைவாக, தன்னிகரற்று பரிணமித்த அதிகாரியாக தன்னை 1940-ல் நிரூபித்த ஃபிலிப், பயிற்சியில் முன்னோடியாளராக விளங்கினார். மேலும், இந்தியப் பெருங்கடலில் முதன் முறையாக நடந்த ராணுவ நடவடிக்கைக்கும் சாட்சியானார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,கார்டன்ஸ்டொனில் வளர்ந்துவந்த ஃபிலிப் (அமர்ந்திருப்பவர்). அங்கு சிறு நாடகங்களில் பங்கேற்றார்.

மத்திய பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஹெச்எம்எஸ் வேலியன்ட் போர்க்கப்பலுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஃபிலிப், 1941-ல் கேப் மட்டாபன் போரில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவரது பெயர் நினைவுக் குறிப்பில் இடம்பெற்றது.

“நான் மற்றொரு கப்பலை கண்டேன். அது மத்தியப் பாகம் எரிந்து கொண்டிருந்தது. 15 எறிகுண்டுகள் அதன் மீது குறிவைத்து எறியப்பட்டதும் அது இல்லாமலே போனது.”

அக்டோபர் 1942-ல், ராயல் கடற்படையில் பணியாற்றும் மிக இளமையான லெப்டிணன்ட்களில் ஒருவராக விளங்கி ஹெச்எம்எச் வாலேஸ் போர்க்கப்பலில் சேவையாற்றினார்.

நிச்சயதார்த்தம்

இந்த கால கட்டம் முழுதும் அவரும் இளவரசி எலிசபெத்தும் கடிதங்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச குடும்பத்துடன் தங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டார். அத்தகைய சந்திப்புகளில் ஒன்றின்போது 1943-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, கடற்படை சீருடையில் இருந்த ஃபிலிப்பின் படத்தை தனது அலங்கார மேஜை மீது எலிசபெத் வைத்தார்.

அவர்களின் உறவு, அரச குடும்பத்தில் உள்ள சில விசுவாசிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியபோதும், அமைதியாக வளர்ந்தது. அதில் ஒருவர் இளவரசர் ஃபிலிப்பை “முரடான, மரியாதையற்றவர் ” என்று கூறியிருந்தார். ஆனால் இளம் இளவரசி அவரை மிகவும் நேசித்தார். 1946, கோடையில் மன்னரிடம் அவரது மகளை திருமணம் செய்து வைக்குமாறு இளவரசியின் காதலர் கோரினார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,கடற்படை சேவையில் அளப்பரிய பணியாற்றிய ஃபிலிப்

எனினும், நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, இளவரசருக்கு புதிய தேசிய அடையாளமும் குடும்பப் பெயரும் தேவைப்பட்டது. இதனால் தனது கிரேக்க பெயரை துறந்து, பிரிட்டிஷ் குடிமகனாக மாறினார். மேலும், தனது தாயாரின் குடும்பப் பெயரான மவுன்ட்பேட்டனை தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்.

திருமண விழாவுக்கு முதல் நாள், மன்னர் ஆறாம் ஜார்ஜ், அரசு குடும்பத்து “மாட்சிமை பொருந்திய” பட்டத்தை ஃபிலிப்புக்கு சூட்டினார். திருமண நாளன்று காலையில், எடின்பரோ கோமகன், மேரியோனெத் பிரபு, கிரெனிச் பிரபு ஆகியபட்டங்கள் இவருக்கு சூட்டப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் 20 நவம்பர் 1947-ல் திருமணம் நடைபெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் இதனை போருக்குப் பிந்தைய பிரிட்டனில் படிந்த சாம்பலில் மின்னிய வண்ணமயமான நிகழ்வு இது என்று வருணித்தார்.

நிறுத்தப்பட்ட பணி

கோமகன் மீண்டும் கடற்படை பணிக்கு திரும்பியதும் மால்டாவில் நியமிக்கப்பட்டார். இந்த தம்பதி மற்ற அரச குடும்பம் வாழாத வாழ்வை குறைந்தபட்சம் சிறிது காலத்துக்காவது வாழ்ந்தது.

இவர்களின் மகன் இளவரசர் சார்ல்ஸ் பக்கிங்காம் அரண்மனையில் 1948-ல் பிறந்தார். பிறகு மகள் இளவரசி ஏன் 1950-ல் பிறந்தார்.

2 செப்டம்பர் 1950-ல் ஒவ்வொரு கடற்படை அதிகாரியும் கனவு கண்ட லட்சியத்தை அடையும் விதமாக மிகப்பெரிய போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மேக்பையின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரது கடற்படை சேவை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. ஆறாம் ஜார்ஜின் உடல்நிலை மோசமாகியது. அவரது மகள் மேலதிக அரச கடமைகளை சுமக்க வேண்டும் என்பதால் அவருக்கு கணவரின் பக்கபலம் தேவைப்பட்டது.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,இவருக்கும் இளவரசி எலிசபெத்துக்கும் நடந்த திருமணம், போருக்கு பிந்தைய பிரிட்டனில் படிந்த சாம்பலில் மின்னிய வண்ணங்கள் என்று வருணிக்கப்பட்டது.

ஜூலை 1951-ல் ராயல் கடற்படையில் இருந்து விடுப்பில் சென்றார் ஃபிலிப். மீண்டும் தீவிரமான பணிக்கு அவர் திரும்பவேயில்லை. போர்க் கப்பலில் பணியாற்றுவதற்காக பிறந்தவர் கோமகன் அல்ல என வருத்தங்களுடன் தெரிவித்துக் கொண்டாலும், தமது வாழ்வின் பிந்தைய காலத்தில் கடற்படை சேவையை தொடர முடியாமல் போனதற்காக அவர் வருந்தியதாகத் தெரிவித்தார்.

சமகாலத்தவர்கள், அவர் தமது சொந்த திறமையுடன் முதலாவது கடல் மன்னராக உயர்ந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

1952-ல் இந்த அரச தம்பதி காமன்வெத் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். மன்னர் ஆறாம் ஜார்ஜும் அரசியும் இந்த பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

நவீனமயமான சிந்தனைகள்

கென்யாவின் வேட்டைப் பூங்காவில் பிப்ரவரி மாதம் அவர்கள் தங்கியிருந்த வேளையில், மன்னர் உயிரிழந்து விட்டதாக செய்தி வந்தது. இதயத்தமனி உறைவு எனப்படும் இதயத்துக்கு செல்லும் ரத்த உறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

தனது மனைவிதான் இப்போது அரசி என அவரிடம் அறிவிக்கும் முடிவு இளவரசிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நண்பர் பிற்காலத்தில் இளவரசர் ஃபிலிப் பற்றி குறிப்பிடுகையில், பாதி உலகின் சுமையே அவர் மீது வந்தது போல இருந்தது என்றார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,முடிசூட்டு விழாவில் அரசிக்கு முதல் மரியாதை செலுத்துபவராக ஃபிலிப் இருந்தார்.

தனது கடற்படை சேவையால் கவரப்பட்ட அவர், தனக்கான புதிய பொறுப்பை அவரே உருவாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணிமுடியை எலிசபெத் ஏற்றுக் கொள்வதால், அந்தப் பொறுப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

முடிசூட்டு விழா நெருங்கிய வேளையில் பிறப்பிக்கப்பட்ட அரச கட்டளையில், எல்லா நிகழ்ச்சிகளிலும் அரசிக்கு அடுத்தநிலையில் இளவரசர் ஃபிலிப் இருப்பார் என்று கூறப்பட்டது. இருப்பினும், எவ்வித அரசியலமைப்பு பதவியையும் அவர் வகிக்கவில்லை.

சிறப்பாக நவீனமயமாக்குவது எப்படி, முடியாட்சியை எவ்வாறு சீர்படுத்துவது போன்ற சிந்தனைகள் அடங்கியவராக கோமகன் விளங்கினார். ஆனால், அரண்பனையின் பழமைவாதிகளின் எதிர்ப்பால் அவரது யோசனைகள் ஏற்கப்படாததால் வெறுப்படைந்தார்.

கசப்பான அடி

தம்முடைய சில சக்திகளை,தீவிரமான சமூக வாழ்வுக்காக அவர் செலவிட்டார். அவரும் ஒரு சில ஆண் நண்பர்களும் வாரந்தோரும் மத்திய லண்டனில் உள்ள சோஹோ உணவக அறைகளில் சந்திப்பார்கள்.

அவை நீளமான, மகிழ்ச்சியான மதிய உணவாகவும் இரவு கேளிக்கை மன்றங்களுக்கு அவர் செல்லும்போது அடிக்கடி பிரபல நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதுமாகவும் இருந்தன.

தமது ஆளுகையை செலுத்தக் கூடிய ஒரு இடமாக அவரது குடும்பம் இருந்தது. எனினும், தனது பிள்ளைகளுக்கு பெயர் வைக்கப்பட்டதில் அவரது அதிகாரம் தோல்வியைத் தழுவியது.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,துணைவனுக்குரிய வாழ்வுக்கு அவர் பொருந்திக் கொள்ள வேண்டியதாயிற்று

தங்களுடைய குடும்பம் சொந்த குடும்பப் பெயரான மவுன்ட்பேட்டனுக்கு பதிலாக வின்ட்ஸர் பெயருடன் இருக்கும் என்ற அரசியின் முடிவு ஓர் கசப்பான அடியாகும்.

இந்த நாட்டில் எனது பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய பெயரை வைக்கக் கூட அனுமதியில்லாத ஒருவனாக நான் இருக்கிறேன் என்று தனது நண்பர்களிடம் அவர் புகார் கூறினார். “நான் எதுவும் இல்லை ஆனால் ஒரு அமீபா” என்று அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர் என்ற முறையில், இளவரசர் ஃபிலிப் தொடர்ச்சியற்ற மற்றும் உணர்வற்றவராக தோன்றினார்.

இளவரசர் சார்ல்ஸின் சுயசரிதையை எழுதிய ஜோனாதன் டிம்பிள்பியை பொருத்தவரை, இளம் வயதில் பொது இடத்தில் தனது தந்தையால் கண்டிக்கப்படும்போது அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். தந்தைக்கும் மூத்த மகனுக்குமான உறவு அவ்வளவு எளிதாக இருந்ததில்லை என்று குறிப்பிடுகிறார்.

குணாதியசத்தின் வலிமை

தனது பழைய பள்ளியான கோர்டன்ஸ்டொனுக்கு, தமது மகனை அனுப்புவதால், அவரது ஒருவித இயல்பான போக்கை எதிர்கொள்ள முடியும் என்ற உள்ளுணர்வுடன் கூடிய நம்பிக்கையில்,

அங்கு இளவரசர் சார்ல்ஸ் செல்ல வேண்டும் என்று ஃபிலிப் வலியுறுத்தினார்.

அந்த நடவடிக்கையால், இளம் இளவரசர் பள்ளியை வெறுத்தார். அங்கு வீட்டு ஞாபகத்தால் உடல்சுகவீனம் அடைந்தது மட்டுமின்றி, உடன் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளானார்.

கோமகனின் அணுகுமுறைகள் அவரது சொந்த அனுபவத்தின் சில நேரங்களில் தனிமையாக கழித்த குழந்தைப் பருவத்தை பிரபலித்தன.

இளம் பருவத்தில் தன்னம்பிக்கையை மேம்படுத்த கட்டாயப்படுத்தப்பட்ட அவர், தம்மைப் போலவே பலரும் குணாதிசய வலிமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை கண்டறிந்தார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,கோர்டன்ஸ்டொன் பள்ளிக்கு இளவரசர் சார்ல்ஸ் செல்ல வேண்டும் என்ற அவரது வலியுறுத்தியல், தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிளவை உருவாக்கியது.

இளவரசரின் முக்கிய கவலைகளில் ஒன்று இளைஞர்களின் நலன்கள். 1956-ல் அந்த ஆர்வம் பிற்காலத்தில் வெற்றிகரமாக அமைந்த எடின்பரோ கோமகன் விருது திட்டத்தை தொடங்க வழியமைத்தது.

ஆண்டுகள் உருண்டோடிய நலையில், உலகம் முழுவதும் உள்ள 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட உடல்வாகுடன் கூடிய சுமார் ஆறு மில்லியன் மாற்றுத் திறனாளிகளை அவர்களின் உடல், மன, உணர்வு ரீதியிலான குறைபாடுகளை எதிர்கொள்ள அந்த விருது உதவியது. மேலும், வெளி உலக செயல்பாடுகளில் குழுவாக செயல்படுவதை ஊக்குவித்து, வளம் மிக்கவர்களாகவும், இயற்கை மீதான மரியாதை அதிகரிப்பதையும் அது உறுதிப்படுத்தியது.

“எந்தவொரு துறையிலும் இளைஞர்களை பயன்படுத்தினால் அது வெற்றி பெறும்” என்று பிபிசியிடம் கூறிய அவர், அந்த வெற்றி உணர்வு மேலும் பலருக்கும் பரவும் என்றார்.

‘தார்மீக உணர்வு’

இந்தியாவில் 1961-ல் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு புலியை அவர் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், வன உயிரினம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில் அவர் ஆர்வம் காட்டினார்.

ஒரு கோப்பை போல புலி காண்பிக்கப்பட்ட படம் பிரசுரமானதுதான் அந்த நிலைமையை மேலும் மோசமாக்கியது.

எனினும், சர்வதேச வன உயிரின நிதியத்தின் பின்னணியில், அவரது கணிசமான செல்வாக்கு மற்றும் சக்தியை பயன்படுத்தியதால் அந்த அமைப்பின் முதலாவது தலைவராக அவர் இயல்பாகவே அவர் தேர்வானதாக தோன்றியது.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,எடின்பரோ கோமகன் சுற்றுச்சூழல் முயற்சிகளில் வழக்கமான ஆற்றலையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த கிரகத்தில் வித, விதமான உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது அற்புதமானது என்று நினைக்கிறேன் என்று அவர் ஓர் பிபிசி நேர்காணலின்போது கூறினார்.

“பிறப்பு அல்லது இறப்புக்கான சக்தி நம்மைப் போன்ற மனிதர்களிடம் இருக்குமானால், அழிவு அல்லது உயிர்ப்பித்தலை ஒருவித தார்மீக உணர்வுடன் செயல்படுத்தியிருப்போம் என்று நினைக்கிறேன். ஒன்றை அழிக்க வேண்டாம் எனும்போது அதை நாம் ஏன் செய்ய வேண்டும்?” என்று அவர் கூறினார்.

பறவையை சுட்ட செயலை நியாயப்படுத்திய அவரது செயல், உயிரியல் ஆர்வலர்கள் சிலருக்கு எரிச்சலூட்டியது.

“விளையாட்டு இனங்கள், அடுத்த ஆண்டும் தேவைப்படும் என்பதால் அவற்றை நீங்கள் உயிர் பிழைக்கச் செய்கிறீர்கள். நிச்சயமாக ஒரு விவசாயியை போல. நீங்கள் பயிரிட விரும்புகிறீர்கள். அழிப்பதற்கு விரும்பவில்லை” என்றார் அவர்.

வெளிப்படை

ஆனால், உலக காடுகளை பராமரிக்கவும், பெருங்கடல்களில் மேலதிகமாக மீன்பிடித்தலையும் எதிர்த்து பிரசாரம் செய்வதிலும் அவர் ஈடுபாடு காட்டியதால் பரவலாக போற்றப்பட்டார்.

தொழிலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்வது, தற்போது வொர்க் ஃபவுன்டேஷன் என்றழைக்கப்படும் தொழிற்சங்கத்துக்கு கெளரவ தலைவராவது போன்ற பணிகளில் இளவரசர் சார்ல்ஸ் ஆர்வம் காட்டினார்.

1961-ல் தொழிலதிபர்கள் குழுவிடம் முணுமுணுக்கும் தமது பண்பை கோமகன் இவ்வாறு வெளிப்படுத்தினார். “ஜென்டில்மேன், உங்கள் கைகளை வெளியே எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.”

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,பிரிட்டிஷ் தொழிற்துறையில் அவர் தீவிர ஆர்வம் காட்டினார்.

இந்த வெளிப்படையான குணத்துக்கு சிலர் முரட்டுத்தனம் என்று விளக்கம் அளித்தார்கள். மேலும் சில நேரங்களில் அதுவே அவரை பிரச்னையில் சிக்கவைத்தது. சூழ்நிலைகளை தவறாக புரிந்து கொள்வதால், குறிப்பாக வெளிநாட்டு பயணத்தின்போது அவர் நடந்து கொண்ட விதம் அவருக்கு நிச்சயம் நன்மதிப்பை பெற்றுத் தந்தது.

1986-ல் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் செய்த அரசியுடன் அவர் சென்றபோது மிகவும் பிரபமாகும் வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டார். நீளமான சிறிய கண்கள் என்று அங்கிருந்த பிரிட்டிஷ் மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் என்று கருதி அவர் கருத்து வெளியிட்டார். சீனாவுக்கு அது சிறிதளவு கவலை அளிப்பதாகத் தோன்றினாலும், நாளிதழ்களில் அந்த கருத்துக்கு வேகமாக முன்னுரிமை தரப்பட்டது. 2002-ல் ஆஸ்திரேலியாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டபோது, பழங்குடி தொழிலதிபர்களைப் பார்த்து “இன்னுமா நீங்கள் ஒருவர் மீது ஒருவர் ஈட்டி எறிந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

பதற்றமான தருணங்கள்

இதுபோன்ற கருத்துகளால் சில தரப்பில் இருந்து அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், மற்றவர்கள், அதை சொந்த கருத்தை சுயமாக வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட ஒருவரின் பிரதிபலிப்பாகவும், அரசியலுக்காக அதை மாற்றிக் கொள்ள மறுத்தவராகவும் பார்த்தார்கள்.

உண்மையில், பலரும் சொல்லாடலாகக் கூறப்படும் அவரது கருத்துகளை, இறுக்கமான சூழ்நிலைகளை தளர்த்தவும், மக்களை தளர்வடையச் செய்யவும் மேற்கொள்ளப்படும் முயற்சியே தவிர வேறில்லை என்பதாக பார்த்தார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும், விளையாட்டு மீதான தனது உற்சாகத்தை இளவரசர் ஃபிலிப் கடைப்பிடித்தார். படகு சவாரி, கிரிக்கெட், போலா, குதிரைகள் பூட்டிய சாரட்டை திறம்பட இயக்கினார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,போலோ மீது குறிப்பிடத்தக்க பேரார்வம் அவருக்கு இருந்தது

சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பின் தலைவராக பல ஆண்டுகளாக பதவி வகித்தார்.

ஜோனாத்தன் டிம்பிளேவின் இளவரசர் சார்ல்ஸின் சுயசரிதை வெளியானபோது, தனது மூத்த மகனுடனான பதற்றங்கள் மீண்டும் காணப்பட்டன.

அதில், லேடி டயானா ஸ்பென்சர் என்பவரை திருமணம் செய்து கொள்ள இளவரசர் சார்ல்ஸ், எடின்பரோ கோமகனால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், தமது பிள்ளைகளின் திருமணங்கள் பிளவுபட்ட சிக்கலான காலங்களில் கூட கோமகன் மிகவும் அக்கறையுள்ளவராக இருந்ததை பல விமர்சகர்களும் ஒப்புக் கொள்ளலாம்.

பிரச்னைகளை புரிந்து கொள்ளும் முயற்சியை அவர் முன்னெடுத்தார், ஒருவேளை, அரச குடும்பத்து திருமணங்களில் எழும் சிக்கல்கள் குறித்த தனது சொந்த நினைவுகளால் அவர் உந்தப்பட்டிருக்கலாம்.

யாத்திரை

தனது நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளான இளவரசி ஏனே, இளவரசர் ஆன்ட்ரூ, இளவரசர் சார்ல்ஸ் ஆகியோரின் திருமணங்கள் தோல்வியடைந்ததால் இளவரசர் ஃபிலிப் பெரிதும் வருத்தமாக இருந்தார்.

ஆனால், தனிப்பட்ட பிரச்னைகள் பற்றி பேச அவர் எப்போதும் மறுத்தார். அதுபோலவே முன்பும் இருந்ததாகவும் இனியும் அதை தொடங்கப் போவதில்லை என்றும் 1994-ல் ஒரு நாளிதழிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.

வயது மூப்படைந்தாலும், அவரது வாழ்வின் ஓட்டத்தை அது அரிதாகவே குறைத்தது. இயற்கைக்கான சர்வதேச வன உயிரியல் நிதியம் மற்றும், அரசியின் வெளிநாட்டு பயணங்கள் என்று அவர் விரிவாக பயணம் செய்தார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை ஓட்டுவது கோமகனின் பல்வேறு விளையாட்டு ஆர்வங்களில் ஒன்று.

1994-ல் ஜெருசலேத்தில் நிறுவப்பட்டுள்ள தனது தாயாரின் கல்லறையை பார்ப்பதற்காக அங்கு தனிப்பட்ட யாத்ரீகத்தை அவர் மேற்கொண்டார். தன்னை அங்குதான் புதைக்க வேண்டும் என்ற அவரது தாயாரின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

1995-ல் ஜப்பானை வென்றதை நினைவுகூறும் 50-வது ஆண்டு கொண்டாடத்தின்போது அவருக்கு எரிச்சலூட்டக்கூடிய மற்றொரு தருணம் நடந்தது.

டோக்யோவில் ஜப்பானியர்கள் சரண் அடைந்தபோது, அங்கு பணியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கப்பலில் இளவரசர் ஃபிலிப் பணியாற்றினார். இதனால் அந்த ஆண்டு நிகழ்வையொட்டி, கிழக்கு நோக்கிய பிரசாரத்தில் அங்கம் வகித்தவர் என்ற முறையில், அதில் பங்கெடுத்த மற்ற முன்னாள் படை வீரர்களுடன் சேர்ந்து, அரசியை கடந்து செல்லும் அணிவகுப்பில் இவரும் இடம்பெற்றார்.

இதமான தொனி

தங்களுக்கு இழைக்கப்பட்ட கடினமான அல்லது உண்மையில் சாத்தியமற்ற, மன்னிக்க முடியாத விஷயமாகக் கருதி அந்த ஜப்பானிய முன்னாள் கைதிகளுக்காக அவர் தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,வேல்ஸ் இளவரசி டயானாவுக்கு அவர் மிகப்பெரிய ஆதாரமாக விளங்கினார்

வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்துக்குப் பிறகு, அரச குடும்பத்திடம் இருந்து பொதுமக்கள் சில நேரங்களில் அன்னியப்பட்டு இருந்ததால் உந்தப்பட்ட அவரது தொடர்ச்சியற்ற அணுகுமுறை பிந்தைய ஆண்டுகளில் சிறிதளவு மாறியது.

கோமனுக்கும் இளவரசிக்கும் இடையே நடைபெற்ற கடிதப்பரிவர்த்தனைகள், தனது மருமகளுடன் அவர் அன்னியமாக இருதார் என்றூ கூறப்படுவதை மறுக்கும் முயற்சியாக 2007-ல் வெளியிடப்பட்டது.

அன்புள்ள அப்பா என்றவாறு எழுதப்பட்ட கடிதங்கள், டயானாவுக்கு அவர் எந்த அளவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதை காண்பித்தன. மிகவும் இதமான தொணியில் அவருக்கு எழுதிய கோடிடப்பட்ட வரிகள் ஒரு யதார்த்தம்.

டயானாவின் தந்தையின் கடைசி கால நண்பர் மொஹம்மத் அல் ஃபயெத் டோடி கூட, டயானா மரணம் தொடர்பான புலனாய்வில் அவர் இளவரசர் ஃபிலிப்பின் ஆணைப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்றார். அந்த குற்றச்சாட்டை பிரேதப் பரிசோதனை செய்தவர் கடுமையாக நிராகரித்தார்.

எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப், உள்ள உறுதியும் தனித்துவமும் மிக்கவராக வாழ்ந்து பிரிட்டிஷ் சமூகத்தின் மையத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

‘முட்டாள்தனமற்ற அணுகுமுறை’

இரண்டாம் நிலையிலேயே எப்போதும் இருக்க கட்டாயப்படுத்தப்பட்ட பொறுப்பை வகிக்கும் இயல்பான மனிதர் அவர். சண்டையிடும் தன்மை வாய்ந்தவருடன், தனது பதவியின் நுட்பத்தை உணர்ந்தவராய் அடிக்கடி அவர் அசெளகரியமாக அமர்ந்திருந்தவர் அவர்.

“எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்துள்ளேன்,” என்று ஒருமுறை பிபிசியிடம் அவர் கூறினார்.

“நான் செய்ய வேண்டிய விஷயங்களை ஒட்டுமொத்தமாக திடீரென என்னால் மாற்றி விட முடியாது. நான் சில விஷயங்களுக்கு எதிர்வினையாற்றுதுபோல, எனது விருப்பங்களையோ வழிகளையோ என்னால் மாற்ற முடியாது. அதுதான் எனது பாணி” என்று அவர் கூறினார்.

எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,அரசியால் தனது பலமாகவும் வாழ்விற்கும் உரியவர் என்று அவர் குறிப்பிடப்பட்டார்.

பொதுவாழ்வில் இருந்து விலகல்

ஆண்டுக்கணக்கில் அரசியை ஆதரித்து தான் நடத்தி வந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொது வாழ்வில் இருந்து கோமகன் விலகினார்.

தனிப்பட்ட முறையில் 1952-ம் ஆண்டு முதல் 22,219 நிகழ்ச்சிகளை அவர் நிறைவு செய்ததாக பக்கிங்காம் அரண்மனை கணக்கிட்டது. குறிப்பிடத்தக்க பொதுவாழ்வுப் பணிக்காக அவருக்கு அப்போதைய பிரதமர் தெரீசா மே நன்றி தெரிவித்தார்.

ஃபிலிப் தனது 70ஆவது திருமண ஆண்டு விழாவை அந்த ஆண்டின் பிற்பகுதியில் கொண்டாடினார்.

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தபோதும், அது வின்சர் கோட்டையைச் சுற்றிய மைதானங்களில் குதிரை சாரட்டை ஓட்டும் அவரது ஆர்வத்தை தடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டில் சாண்ட்ரிங்காம் அருகே காரை ஓட்டிச்சென்றபோது ஏற்பட்ட மோசமான கார் விபத்தில் இருந்து இவர் தப்பினார்.

அந்த சம்பவத்தில் வேறு காரில் இருந்த இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர். அப்போது கோமகன் தாமாக முன்வந்து தனது ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைத்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஃபிலிப்பும் அரசியும் வின்சர் கோட்டைக்கு இடம் மாறினர். அவர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடப்பட்டது.

“எனது பலமும் இருப்பும்”

இளவரசர் ஃபிலிப், தனது பதவியை பயன்படுத்தி பிரிட்டிஷ் வாழ்வுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதில் வெற்றிகரமாக இருந்தார். கால நடையில் மக்களின் சமூக மனப்பான்மை மாறியபோதெல்லாம் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் முடியாட்சி இருப்பதற்கு தனது பங்களிப்பை அவர் வழங்கினார்.

ஆனால், அரசியின் நீண்ட கால ஆளுகைக்கு நிலையான மற்றும் வலுவான அவரது ஆதரவுதான் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் வழங்கிய மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

அரசியால் ஆட்சி செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துவதுதான் தனது பணி என்று தாம் நம்புவதாக தனது சுயசரிதையை எழுதியவரிடம் இளவரசர் ஃபிலிப் கூறினார்.

இந்த தம்பதி பொன் விழாவில் கொண்டாடியபோது அதில் பேசிய அரசி, பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு நீண்ட காலம் சேவை வழங்கிய தனது கணவருக்கு கீழ்கண்டவாறு மரியாதை செலுத்தினார்.

“பாராட்டுகளை எளிதாக பெற்றுக் கொள்ளாதவர் அவர், ஆனால், இத்தனை ஆண்டுகளாக எனது பலமாகவும் ஆதரவாகவும் மட்டுமே அவர் இருந்திருக்கிறார். அதற்காக நானும், எனது மொத்த குடும்பமும், பிரிட்டன் உட்பட மற்ற நாடுகளும், அவர் கோரக் கூடிய அல்லது நாம் அறிய முடியாத அளவுக்கு மிகப்பெரிய நன்றிக் கடனைப்பட்டுள்ளோம்” என்று அரசி குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் ஃபீல்ட் மார்ஷல் சீருடையில் எடின்பரோ கோமகன்
படக்குறிப்பு,பிரிட்டிஷ் ராணுவத்தில் ஃபீல்ட் மார்ஷல் சீருடையில் எடின்பரோ கோமகன்

அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

BBC

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link