திருநெல்வேலி பாற்பண்ணை மற்றும் பாரதிபுரம் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதி கண்காணிப்பு வலயத்திலிருந்து நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் விலக்கப்படுகிறது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட J/114 கிராம சேவையாளர் பிரிவு கடந்த 14 நாள்களாக கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பாரதிபுரம் பகுதியில் 88 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் பாற்பண்ணை மற்றும் பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது எம வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
அதேவேளை புத்தாண்டை முன்னிட்டு மக்கள் திரையரங்குகளில் கூடுவார்கள் என எதிர்பார்ப்பதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளை மறு அறிவித்தல் வரை மூடபடுவதாகவும் அறிவித்துள்ளார்.