இலங்கை பிரதான செய்திகள்

யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 640 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணத்தில் 17 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேரும்,(நால்வர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றுபவர்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேருக்கும் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற 2 பேருக்கும் , உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், (நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்) சங்கானை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற 2 பேருக்கும் என 17பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link