யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் .
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .
திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள் , பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .
அதேவேளை வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்கும் (இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்) கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், (சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்) மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்குமகா 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் .