பிரதான செய்திகள் விளையாட்டு

பெங்களூரு தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது

நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆறாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ஓட்ட வித்தியாசத்தில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி களத்தடுப்பினை தொிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை மாத்திரமே எடுத்த நிலையில் 6 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பெங்களூரு அணி தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது வெற்றி இது என்பதுடன் ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்

இன்றையதினம் மும்பையில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link