கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே விசைப்படகு ஒன்றின் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 9 பேரைக் காணவில்லை எனத் தொிவிக்கப்பட்டள்ளது
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியிலிருந்து விசைப்படகில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 11ஆம் திகதி புறப்பட்டு மீன்பிடிக்கச் சென்றனர்.
அந்த விசைப்படகு fle;j செவ்வாய்க்கிழமை அதிகாலை கர்நாடக – கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஏபிஎல் லீ ஹாவ்ரே (APL LE HAVRE) எனும் கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் படகு மூழ்கியதில் படகிலிருந்த மூன்று மீனவர்கள் மரணம் அடைந்ததாகவும், இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டதுடன், காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய கப்பல் ஆழ்கடலில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது