மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனா்.
நைஜரின் தலைநகர் நியாமியில் உள்ள ஆரம்ப பாடசலை ஒன்றிலே இவ்வாறு தீவிப்த்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் சில வகுப்புகள் பாடசாலைக் கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்புகள் வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் பற்றிய தீ பாடசாலை முழுவதும் பரவியது.
தீ நாலாபுறமும் சூழ்ந்ததால் மாணவர்கள் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயில் சிக்கி 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.