பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு பயணம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(16.04.2021) மேற்கொண்டார்.
கடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு பயணத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சரினால் அவதானிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதே இன்றைய பயணத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த திடீர் விஜயத்தின் போது, வடிகான் கட்டமைப்பு, ஜஸ் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் வாகன தரிப்பிடத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரித்ததுடன் அவற்றை தீர்த்து வைப்பதற்கு வடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.
குறிப்பாக அன்றைய தினம் வாகனங்கள தரித்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவு படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் எவரும் இல்லாதால் இன்றைய தினம் (16.04.2021) அதிகாலை அங்கு சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாகன தரிப்பிடத்திற்கு பொறுப்பான அதிகாரி குறித்த விடயம் தொடர்பாக தெளிவூட்டினார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவ்வதிகாரி, வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை எனவும் பக்கத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய காணியை பெற்றுப் கொடுத்தால் அக்குறையை நிவர்த்தி செய்யலாமென அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
சந்தை வளாகத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விளக்குகள் இல்லையெனவும் அதனால் வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு செல்ல தயங்குவதாகவும் அவர் அமைச்சரிடம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஒரு சில வியாபாரிகள்கள் மீன் வெட்டும் பகுதிகளை தங்களது களஞ்சியங்காளாக பயன்படுத்துவதால் தங்களுக்கான வருமானம் பாதிக்கப்படுவதாக ஐஸ் உற்பத்தி நிலையத்தின் அதிகாரி ஒருவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
அதிகாரிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகனைள செவிமடுத்த கடற்றொழில் அமைச்சர் தன்னை வந்து சந்திக்கும்படியும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்..