இந்தியா சினிமா பிரதான செய்திகள்

தீவிர மாரடைப்பு – நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தீவிர மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது விவேக் மயங்கி விழுந்தார் எனவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவேக் சுயநினைவோடு உள்ளார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

நேற்று வியாழக்கிழமைதான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளாா். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரச மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்ககு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link