யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் ஆய்வு கூடத்தில் 386 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் (சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்), யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் , மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதேவேளை திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு இருந்தவர்களிடம், இன்று முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பிசிஆர் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்