Home இலங்கைமுல்லைத்தீவு சாலைக் காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு!

முல்லைத்தீவு சாலைக் காட்டுக்குள் ஆயுதங்கள் மீட்பு!

by admin

முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு விமானப் படையின் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலிலேயே அவை மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு வரைபடம், 910646 என்ற இலக்கமுடைய தகடு, தமிழன் குண்டு ஒன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 4 குண்டுகள், ஆர்பிஜி மோட்டார் குண்டுகள் 5, 60 தர மோட்டார் குண்டுகள் 8, 81 தர மோட்டார் குண்டுகள் 3 மற்றும் கையெறி குண்டு ஒன்று என்பனவே மீட்கப்பட்டன.

அவற்றை செயலிழப்புச் செய்வதற்காக சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More