அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் (George Floyd) என்னும் 46 வயதான கறுப்பு இனத்தவாின் கொலை தொடா்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் ஜோர்ஜ் ப்ளொயிட்டை கைது செய்த காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் என்பவா் 9 நிமிடங்கள் வரை முழங்காலை வைத்து அழுத்தி கழுத்து நெரித்தகாட்சி ஒருவரால் ஔிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த காணொளி வௌியிடப்பட்டதை தொடர்ந்து ஜோர்ஜ் ப்ளொய்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் 45 வயதுடைய முன்னாள் காவல்துறை அதிகாரியான டெரெக் சாவினுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை குற்றம் மற்றும் மனிதக் கொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு இன்னும் 8 வாரங்களில் சிறைத்தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் அவர் பல தசாப்தங்களை சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த மூன்று வாரங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தநிலையில் இவ்வாறு தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது
டெரெக் சாவின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது