Home இந்தியா இந்தியாவை உலுப்பும் இரட்டைத்திரிபு – ஒருநாளில் இரண்டாயிரம் மரணங்கள் -மருத்துவ ஒக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு

இந்தியாவை உலுப்பும் இரட்டைத்திரிபு – ஒருநாளில் இரண்டாயிரம் மரணங்கள் -மருத்துவ ஒக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு

by admin
.(படம்:ரோய்ட்டர்)

இந்தியாவை கொரோனா வைரஸின் உருமாறிய இரட்டைத் திரிபு வைரஸ் சுனாமி அலை போலத் தாக்கி வருகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவா கிய இறப்புகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டி உள்ளது. (2,023)ஒரு நாளில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் பேர் (2,95,041) தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

நாட்டின் பல மாநிலங்களில் வைரஸ் பரிசோதனை நிலையங்கள் செயலிழந்திருக்கின்றன. இதனால் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இதை விடமேலும் அதிகம் என்று மதிப்பிடப்படுகின்றது.

மிகப் பிரமாண்டமான மத சடங்குகளும் அரசியல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுமே வைரஸ் வேகமாகப் பரவியதற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இரண்டாவது அலை ஒன்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ சுகாதார வசதிககளை முன் கூட்டியே தயார் செய்யவில்லை என்று மோடி அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன.

தலைநகர் டில்லி உட்பட மருத்துவமனைகள் பலவற்றில் உயிர்காப்பு ஒக்சிஜன் சிலின்டர்கள் காலியாகிவிட்டன என்று செய்திகள் வருகின்றன. ஒக்சிஜன் விநியோகத்தைச் சீர்செய்வதற்காக மத்திய அரசு அவசரமாகத் தனியார் கம்பனிகளின் உதவியை நாடி உள்ளது.

கறுப்புச் சந்தைகளில் ஒக்சிஜன் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. டில்லியில் உள்ள பிரபல அப்பலோ (Indraprastha Apollo Hospital) தனியார் மருத்துவமனையிலும் ஒக்சிஜன் கையிருப்பு வேகமாக அருகி வருகி வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற தகவலை ரோய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியா தொற்று நோய்க் காலப் பகுதியைக் கணக்கில் எடுக்காமல் ஒக்சிஜனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது.

தொழில்துறைத் தேவைகளுக்கான ஒக்சிஜனே(industrial oxygen) ஏற்றுமதி செய்ய ப்பட்டது என்றும் அதனை மருத்துவ ஒக்சிஜன் (Medical Oxygen) என்று தவறாகக் தகவல் பரப்பப்படுகிறது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஒக்ரோபரில் கண்டறியப்பட்ட இரட்டைத் திரிபு வைரஸ் காரணமாகவே இந்தியா பெரும் தொற்றலையைச் சந்தி த்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தொற்றாளர்கள் எண்ணிக்கை உச்சஅளவைத் தொட்டுள்ள இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது

———————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.21-04-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More