அஸ்ராஸெனகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தொிவித்துள்ளாா்.
அஸ்ராஸெனகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பலர் சில மணித்தியாலங்களிலேயே குருதி உறைவுக்கு உள்ளான பல சம்பவங்கள் உலகில் பதிவாகியுள்ளன. இலங்கையில் அறுவருக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டது. அதில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவித்துள்ளாா்
மேலும் இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவுகள் தொடர்பான குழு குருதி உறைவுக்கும், தடுப்பூசிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதென தொிவித்துள்ளது.
அதாவது மில்லியன் மக்கள் தொகையில் 4-6 பேர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. எனினும் இவ்வாறு குருதி உறைவு ஏற்படுவது குறைவு. அஸ்ராஸெனகா தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளது என அவா் தொிவித்துள்ளாா்
இதேவேளை, நேற்று (20) இலங்கையில் 367 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 97,471 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நேற்றும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 625 ஆக உயர்வடைந்துள்ளது.