Home உலகம்இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

by admin

இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென்ஆபிரிக்கா போன்ற தீவிர திரிபுத் தொற்றுள்ள நாடுகளுடன் இந்தியாவையும் சேர்ப்பதற்கு பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

இன்று புதன்கிழமை நடைபெற்றசுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல்அட்டால் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் வெளிநாடுகளுடனான எல்லைகளை நீண்டகாலம்மூடி உள்ளது. எனினும் பிரான்ஸ் போன்றநாடுகளில் வதிவிட உரிமை பெற்ற மற்றும் தொழில் வீசாக்களில் தங்கியுள்ள இந்தியர்கள் நாடுகளிடையே தொடர்ந்துபயணம் செய்து வருகின்றனர்.

பிறேசிலுக்கு அடுத்த படியாக உருமாறியவைரஸ் காரணமாக இந்தியாவில் தொற்றுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. பிரித்தானியாவும் ஏற்கனவே இந்தியப் பயணிகளது வருகையைத் தடைசெய்துள்ளது. பிரித்தானிய பிரதமர் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு மேற்கொள்ள இருந்த பயணங்களை ரத்துச் செய்துள்ளனர்.

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.21-04-2021

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More