Home இந்தியா மூன்று மரபுக் கலப்புக் கொண்ட”வங்காளத் திரிபு” இந்தியாவில்!

மூன்று மரபுக் கலப்புக் கொண்ட”வங்காளத் திரிபு” இந்தியாவில்!

by admin
.(படம் :மேற்கு வங்க மாநிலம் போப்பால்நகரில் வைரஸ் தொற்றி உயிரிழந்தவர்களது உடல்கள் வரிசையில் எரியூட்டப் படுகின்ற காட்சி.)

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய “முத்தி ரிபு” (triple-mutation) வைரஸ் கிருமி ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டு பிடித்துள்ளனர் என்ற தகவலை அங்குள்ள நோய் ஆய்வு நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒக்ரோபரில் மகாராஷ்டிராவில் பரவத் தொடங்கிய இரட்டைத் திரிபு வைரஸ் (double mutant variant) இந்தியாவின் தொற்றாளர் எண்ணிக்கையைச் சமீப நாட்களாக உலக சாதனை அளவுக்கு உயர்த்திவிட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகள் ஸ்தம்பித நிலையை எட்டி உள்ளன. இந்தக் கட்டத்தில்மூன்று திரிபுகளின் கலவையாக – மூன்று வித மரபுத் தன்மையை ஓர் உடலில்கொண்ட ‘முத்திரிபு ‘(triple-mutation) பற்றியசெய்தி வெளியாகி இருக்கிறது.

அதி வேகமாகப் பரவுதல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியிடம் இருந்து தப்புதல்போன்ற தன்மைகளைக் கொண்ட இந்தகிருமியை “வங்காளத் திரிபு” (Bengal strain) என்று அழைக்கின்றனர்.

பிாித்தானியா – பிறேசில் – தென்னாபிரிக்கா போன்ற மூன்று திரிபுகளினதும் கூட்டு வடிவமாகச் சந்தேகிக்கப்படும் முத்திரிபு, ஏற்கனவே வைரஸ் தொற்றியவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கும் மறுபடியும் தொற்றக் கூடிய வலிமை கொண்டதா என்ற அச்சம் இந்திய நோயியல் நிபுணர்களிடையேஎழுந்துள்ளது.

“நீங்கள் முதலில் வேறு ஒரு திரிபின்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும்அல்லது நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றி இருந்தாலும் இந்த முத்திரிபு வைரஸிடம் தப்ப முடியாது”” முத்திரிபு” பற்றிய அச்சத்தை இவ்வாறு வார்த்தைகளில் வெளியிட்டிருக்கிறார் தேசிய மரபு உயிரியல் மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த (National Institute of Biomedical Genomics) மருத்துவர் சிறிதர் சின்னஸ்வாமி.

எனினும் இந்த அச்சத்தை நிரூபிப்பதற்கான ஆய்வுகள் முற்றுப் பெறவில்லை. முத்திரிபு வைரஸின் மரபு வரிசை பற்றிய (genome sequencing) ஆராய்ச்சிகள் இனிமேல்தான் நடைபெறவுள்ளன.

ஒருநாள் தொற்றில் உலக சாதனை

இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று லட்சம்பேருக்கு (3,14,835) தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இந்தியாவிலும் உலகளாவிய ரீதியிலும் அதி கூடிய ஒரு நாள்தொற்று எண்ணிக்கை இது என்று கூறப்படுகிறது.

புதன்கிழமை பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 104 ஆகும். வைரஸ் அச்சத்தின் மத்தியில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல்வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.22-04-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More