95
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவை, அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்றுக்காலை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
அவருடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் சென்றிருந்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தின தாக்குதல் தொடர்பில், சி.ஐ.டியினர் இன்று (23.04.21) விசாரணைக்கு அழைத்திருந்தனர். அவருக்கு திடீரென ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கொழும்பிலுள்ள நவலோக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love