மும்பையில் உள்ள விரார் மேற்குப் பகுதியி்ல் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அதிதீவிர சிகிச்சைப்பிாிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 13 பேர் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு மருத்துவமனையில் உள்ள அதிதீவிர சிகிச்சை ப்பிாிவில் 17 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் தொிவிக்கப்படுகிறது.
தீ விபத்து குறித்துஉடனடியாக தீயணைப்பு படையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியிலும்,மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்ட போதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் உள்ளிட்ட கொரோனாவில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்குமுன் நாசிக் நகரில் உள்ள அரச மருத்துவமனையில் ஒக்ஸிஜன் கசிவு காரணமாக 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது