Home இலங்கைதொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக்கூறி விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது.

தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக்கூறி விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது.

by admin

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞர்; ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினா் நேற்று வியாழக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளனர்.


மன்னார் மாவட்ட விசேட விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மேற்படி தொல்பொருள் நாணயம் என கூறப்படும் 257 நாணயக் குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபாிடம் மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சந்தேகநபரும் மீட்கப்பட்ட நாணயக்குற்றிகளும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More