145
முல்லைத்தீவில் இன்றையதினம் 10 ஆர்.பி.ஜி ரக குண்டுகள் மீட்கப்படுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை அண்மித்த வனப்பிரதேசத்தில் இருந்து குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினாின் உதவியுடன் மீட்கப்பட்ட குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் வெடிக்க வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love