Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வெடி மருந்துகளை வழங்கியவா் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வெடி மருந்துகளை வழங்கியவா் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியவா் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு இவ்வாறு வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்

28 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த ராஸிக் ராஸா கல்முனை காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தீவிரவாத ஒழிப்பு பிரிவினரின் கோரிக்கைக்கமைய சந்தேக நபரை மீண்டும் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தொிய வந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More