வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்பவா்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் தொற்றுக்குள்ளானவர்களை இனம் கண்டு கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றத் தவறினால் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.