இலங்கை பிரதான செய்திகள்

மன்னாா் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் நால்வா் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 454 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் 7 பேருக்கு தொற்று

 யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும் , 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேரும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருமாக 5 பேருக்கும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கும் என யாழ்ப்பாணத்தில் 7 பேருக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

வவுனியாவில் 4 பேருக்கு தொற்று.
அதேவேளை வவுனியா பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்கும் , பூவரசம் குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என வவுனியாவில் நால்வருக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ளது.


மன்னாரில் 4 பேருக்கு தொற்று. 

மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 

முல்லைத்தீவில் 3 பேருக்கு தொற்று.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்ற தலா ஒரு நோயாளிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 7 பேருக்கு தொற்று 
கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.