தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தற்போது வரை 29 தொகுதிகளில் முழுமையான வெற்றி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக 23 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் வென்றுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. 234 தொகுதிகளுக்குமான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது. கொரோனா விதி முறைகள், விவிபாட் சோதனை, தேர்தல் கண்காணிப்பாளர்கள் சோதனை என்று பல காரணங்களால் வாக்குகளை எண்ணுவதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் பல கட்ட வாக்கு எண்ணிக்கை மீதம் உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 இடத்தில மட்டும் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி முன்னிலை நிலவரம் : 151 இடங்களில் முன்னிலை திமுக – 118 காங்கிரஸ் – 16 விசிக – 5 மதிமுக (உதயசூரியன் சின்னம்) – 4 சிபிஎம் – 2 சிபிஐ – 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் – 4 இடங்களில் முன்னிலை.
அதிமுக கூட்டணி – 82 இடங்களில் முன்னிலை அதிமுக – 74 பாமக – 5 பாஜக – 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது வெற்றி நிலவரம் 14 இடங்களில் முடிவு வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி -23 இடங்களில் வெற்றி அதிமுக கூட்டணி – 6 இடங்களில் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.