தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து முதல்வர் பழனிசாமி பதவி விலகியுள்ளாா்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. அதிமுக கூட்டணி 75 இடங்களும் அதிமுக 65 இடங்களும் பாமக 5, பாஜக 4, இதரவை 1 என 75 இடங்களையும் பெற்றது.
திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் அதிமுக ஆட்சியை இழந்ததையடுத்து இன்றையதினம் பதவி விலகியுள்ள முதல்வர் பழனிசாமி தனது பதவிவிலகல் கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழகத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற திமுகவின் தலைவர் ஸ்டாலின் வரும் மே 7 ஆம் திகதி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப்பின் நேரு உள் அரங்கில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த போதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் மூன்றாவது முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலின் கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் நேரடியாக தேர்வு செய்யப்படும் முதல்வராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது